ன்று வருடங்களுக்கு முன்னர் இலங்கை வந்தபோது வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாம்களில் மூன்று லட்சம் பேர் இருந்தனர். இப்போது 6000 பேர் மாத்திரமே உள்ளனர். அப்போது வடபகுதி மக்களிடையே தங்கள் எதிர்காலம் குறித்து அச்ச உணர்வு காணப்பட்டது.
இப்போது அவர்கள் ஓரளவு சுதந்திரமாக உணர்கிறார்கள். எனினும் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என அவர்கள் விரும்புவதை உணர முடிந்தது' என தமிழகத்தைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் கொழும்பில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். 2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த இந்திய நாடாளுமன்றத் தூது வட பகுதிக்கு சென்றபோது அவதானித்தவற்றுக்கும் இப்போது அவதானித்தவற்றுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று கேட்டபோதே சுதர்சன நாச்சியப்பன் எம்.பி. இவ்வாறு கூறினார். இலங்கை தமிழ் மக்களுக்கு இந்தியா எப்போதும் ஆதரவளிப்பதுடன் உதவிகளை வழங்கவும் தயாராகவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். பாக்கு நீரிணை மீனவர் பிரச்சினை குறித்த கேள்வியொன்றுக்கு பதிலளித்த அவர், இவ்விடயத்தில் இரு நாடுகளின் மீனவர்களும் கலந்துரையாடி; தீர்வு காண வேண்டும் என்றார். இதற்கு முன்னரும் அவ்வாறான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இரு நாடுகளின் அரசாங்கங்களின் ஆதரவுடன் இப்பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுத்து செல்லப்பட வேண்டும்' என அவர் கூறினார

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’