வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 21 ஏப்ரல், 2012

ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது ஏன் ?: சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம்


.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்மான தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக எதுவும் இல்லையென இந்திய நாடாளுமன்றத் தூதுகுழுவுக்கு தலைமை தாங்கி இலங்கை வந்துள்ள இந்திய லோக்சபா எதிர்க்கட்சி தலைவியான சுஷ்மா ஸ்வராஜ் இன்று கூறினார்.
"ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா வாக்களித்தமைக்கு என்ன காரணமாக இருக்குமென நீங்கள் கருதுகிறீர்கள?" என இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே சுஸ்மா ஸ்வராஜ் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக, தொடர்ந்தும் கருத்து தெரிவித்த சுஸ்மா ஸ்வராஜ், 'ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்தும்படியே கூறுகின்றது. இந்த ஆணைக்குழு இலங்கை அரசினால் நியமிக்கப்பட்டதொன்றாகும். எனவே இலங்கையின் சொந்த ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்தும்படியே ஐ.நா. மனித உரிமை தீர்மானம் கூறுகின்றது. எனவே இத்தீர்மானமானது இலங்கைக்கு எதிரானது அல்ல' என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’