வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 5 ஏப்ரல், 2012

தேசப்பற்றைக் காட்டி ஏமாற்றும் அரசாங்கம் மறுபுறத்தில் "வொஷிங்டனுடன்' ஒப்பந்தம் : சோமவன்ச


சிங்கள பௌத்த இனவாதத்தை அடிப்படையாக வைத்து ஆட்சியதிகாரம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமானால் எதிர்காலத்தில் நாட்டில் ஆபத்தான விளைவுகளை எதிர்நோக்க வேண்டிவரும் என்று எச்சரிக்கை விடுக்கும் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க, தேசப்பற்றைக் காட்டி மக்களை ஏமாற்றும் அரசாங்கம் மறுபுறம் "வொஷிங்டனிடம்' மண்டியிட்டுள்ளதென்றும் தெரிவித்தார். இது தொடர்பாக ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சிங்கள, தமிழ், முஸ்லிம் என எந்தவொரு இனவாத செயற்பாட்டையும் ஜே.வி.பி. அனுமதிப்பதில்லை. எந்த ரீதியில் வந்தாலும் இனவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை ஜே.வி.பி. நிராகரிக்கின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் அரசாங்கம் சிங்கள பௌத்த அடிப்படைவாத அடிப்படையில் ஆட்சியை முன்னெடுத்து வருகின்றது. இந்த நிலை தொடருமானால் நாட்டில் பயங்கரமான சூழ்நிலை உருவாகும். தேசப்பற்று என்ற முத்திரையை பயன்படுத்தி அரசாங்கம் மக்களை ஏமாற்றிய காலம் மலையேறிவிட்டது. மக்கள் இன்று அரசின் இரட்டை வேடம் தொடர்பாக உண்மையை புரிந்து கொண்டுள்ளனர். தேசப்பற்று பேசும் அரசாங்கம் மறுபுறம் வொஷிங்டனிடம் மண்டியிட்டு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு கடனை பெற்றுள்ளது. எமது நாட்டு மக்களை நாணய நிதியத்திடம் அடகு வைத்துள்ளது. ஏகாதிபத்தியவாத விரோதிகளாக காட்டிக்கொள்ளும் அரசாங்கத்தின் வேஷம் இன்று கலைந்துள்ளது. வரலாற்றில் என்றுமில்லாதவாறு பொய் கூறும் பரஸ்பர விரோதமாக அரசாங்கம் செயல்படுகிறது. "கொள்கை' என்றால் அர்த்தம் என்ன என கேட்குமளவிற்கு அரசாங்கம் தடம்புரண்டுள்ளது என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’