வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 5 ஏப்ரல், 2012

நாட்டில் விபரீதமான சூழலை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்படுத்தியுள்ளது: பீரிஸ்


லங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவதற்கு தாமே அமெரிக்காவை தூண்டியதாக கூறியதன் மூலம் நாட்டில் விபரீதமான சூழ்நிலையொன்றை அக்கட்சி ஏற்படுத்தியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நாடாளுமன்றத்தில் நேற்று கூறினார்.
இலங்கை தொடர்பான அமெரிக்காவின் போக்கை தமது கட்சி மீள்வரையறை செய்ததாக ஊடகங்களுக்கு த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தமை குறித்து கூறும்போதே அமைச்சர் பீரிஸ் இவ்வாறு கூறினார். "அமெரிக்கா இத்தீர்மானத்தை கொண்டுவருவதை த.தே.கூட்டமைப்பு ஊக்குவித்தது என நாட்டு மக்கள் அறியும்போது மக்களின் பிரதிபலிப்பு எவ்வாறு அமையும்?. எந்தவொரு அரசாங்கமும் அரசியல் ரீதியாக மக்களின் நிர்பந்தத்திற்குள் உள்ளது. நாம் எதையும் செய்வதில்லை என த.தே.கூட்டமைப்பு கூறுகிறது. ஆனால் இச்செயன்முறைக்கு த.தே.கூட்டமைப்பு இடையூறு ஏற்படுத்துகிறது" என அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’