லங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த நிலையில் திரும்பிச் செல்லும் அகதிகள் தமது சொந்த காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கு உதவுவதற்காக அதிகாரிகள் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புமாறு இந்திய அரசாங்கத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கோரியுள்ளது.
ராஜ்ய சபா உறுப்பினர் ஈ.எம். சுதர்சன நாச்சியப்பன், லோக்சபா உறுப்பினர்களான எம். கிருஷ்ணசாமி, என்.எஸ்.வி. சித்தன், மாணிக்க தாகூர் ஆகியோர் கடந்தவாரம் இலங்கையிலிருந்து திரும்பியபின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதமொன்றில் இக் கோரிக்கையை விடுத்துள்ளனர். இந்தயாவிலிருந்து நில அளவையாளர் அதிகாரிகள் குழுவொன்றை அனுப்பி, காணிகளை அடையாளம் கண்பதன் மூலம் இலங்கையில் இடம்பெயர்ந்த பொதுமக்களும் இந்தியாவிலுள்ள அகதிகளும் தமது தமது சொந்த வீடுகளுக்கு திரும்பிச்செல்ல இயல வேண்டும் என மேற்படி எம்.பிகள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’