வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 30 ஏப்ரல், 2012

கருணாநிதியின் தமிழீழ கனவு ஒரு தந்திரோபாயமே: தி டெலிகிராப்


ழகிரி, ஸ்டாலின் இடையிலான மோதலை திசை திருப்பவே இலங்கையில் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி மீண்டும் கூற ஆரம்பித்துள்ளதாக 'தி டெலிகிராப்' ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தி.மு.க மீதான கறையைப் போக்கவும், இந்த விவகாரத்தில் இந்திய மத்திய அரசுக்கு நெருக்கடி தரவுமே இலங்கை விவகாரத்தை கருணாநிதி கையில் எடுத்துள்ளதாக இந்திய காங்கிரஸ் கட்சி கருதுகிறது. ஆனால், அழகிரி - ஸ்டாலின் இடையிலான பிரச்சினையை திசை திருப்புவதற்காக மேற்கொள்ளப்படும் உத்தி தான் இது என்று 'தி டெலிகிராப்' தெரிவித்துள்ளது. இலங்கையில் தமிழீழம் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக 1980ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட தமிழீழ ஆதரவாளர்களின் அமைப்பான டெசோ அமைப்பின் கூட்டம் இன்று திங்கட்கிழமை சென்னையில் கருணாநிதியின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் 'தி டெலிகிராப்' மேற்கண்டவாறு செய்தி வெளியிட்டுள்ளது. தி.மு.க.வின் இந்த முயற்சி இந்தியத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் டெலிகிராப் கூறியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’