வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 9 ஏப்ரல், 2012

வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற ஜனநாயக ரீதியில் போராடுவோம்: மாவை



டக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை மேற்கொள்ளும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்
யாழ். இளம் கலைஞர் மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை மாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "வடக்கில் இராணுவம் வெளியேறினால் தான் தமிழ் மக்களால் நிம்மதியாக வாழ முடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் எதிர்க் கட்சிகளின் மே தினத்தை ஏற்பாடு செய்துள்ளது தமிழ் தேசியக் கூட்டமப்பின் மே தின அறைகூவல் வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுவதேயாகும். வடக்கில் இராணுவம் நிரந்தரமாக இருக்கலாம் என கனவு காண முடியாது. எமது மண்ணில் நாங்கள் நிம்மதியாக உரிமையுடன் வாழ விரும்புகின்றோம். அதற்காக நாம் எமது மக்கள் சார்ந்த போராட்டங்களை தீவிரப்படுத்த உள்ளோம்" என்றார். இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கையில், "யாழில் மே தினத்தை நடத்தி எமது உரிமையை நிலைநாட்டவுள்ளோம். எங்களை இந்த அரசு தொடர்ந்தும் எமது உரிமைகளை புறக்கணித்து வந்தால் எமது மக்கள் சார்ந்த போராட்டம் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தீவிரப்படுத்தப்படும்" என்றார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’