இலங்கையில் இரு இன மக்களிடையே ஒற்றுமை நல்லிணக்கம் என்பவற்றை ஏற்படுத்துவதற்கு அற்புதமாக வாய்ப்பு கிட்டியுள்ளதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்திய தலைநகர் டெல்லியில் நேற்று இடம்பெற்ற தென் ஆசியா கொள்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 25 வருட கால யுத்தம் தற்போது நிறைவடைந்துள்ளது. ஆனால் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இந்த நல்லிணக்கத்திற்கான பாலத்தை கட்டும் பணியில் மந்த கதியில் இயங்கி வருகின்றது. இரு இன மக்களிடையே ஒற்றுமை நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே இது போன்ற வாய்ப்புக்களை நழுவவிடக்கூடாது எனவும் தெரிவித்தார். மேலும் நான் ஜனாதிபதியாக இருந்து போது உலக நாடுகளுடன் நல்ல உறவு காணப்பட்டது. இந்தியாவுடனான உறவும் முக்கியமானது எனவும் வலியுறுத்தினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’