வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
மாவை சேனாதிராசா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாவை சேனாதிராசா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 ஏப்ரல், 2012

வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற ஜனநாயக ரீதியில் போராடுவோம்: மாவை



டக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை மேற்கொள்ளும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்

சனி, 31 மார்ச், 2012

கிடைத்த சந்தர்ப்பங்களை இழந்து விட்டு முள்ளிவாய்க்காலில் நின்று அழுகின்றோம்: மாவை சேனாதிராஜா


மிழ் மக்களுக்கு கிடைத்த எவ்வளவோ சந்தர்ப்பங்களை நாம் இழந்து விட்டோம் அதனால் தான் இன்று முள்ளிவாய்க்காலில் நின்று அழுகின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கூறினார். தந்தை செல்வாவின் 114 ஆவது ஜனன தின நிகழ்வு யாழ். நாவலர் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை மாலை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மாவை சேனாதிராஜா இவ்வாறு கூறினார்.

வெள்ளி, 15 ஜூலை, 2011

தீவகத்திற்கு கூட்டமைப்பு வேட்பாளர்கள் செல்லமுடியாது தொடர்ந்தும் அச்சுறுத்தல்: மாவை

யாழ். தீவகப் பகுதிக்கு உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரப் பணிக்கு தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்லமுடியாது இருப்பதுடன் தீவகத்திலுள்ள தமது வேட்பாளர்களும் யாழ். நகருக்கு வரமுடியாது இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 12 அக்டோபர், 2010

அரசியல் தீர்வினை எட்டுவதற்கு அடிப்படையை விட்டுக் கொடுக்காமல் செயற்பட வேண்டும்:மாவை எம்.பி

 ரசியல் தீர்வு ஒன்றை நாம் எட்டுவதற்கு எமது அடிப்படையை விட்டுக் கொடுக்காமல் செயற்பட வேண்டும். நாம் சிறு சிறு கட்சிகளாக பிளவுகளாக பிரிந்து நிற்காமல் எவ்வளவுக்கு ஒன்றாக நிற்கும் பலத்தை இணைத்து உருவாக்க முடியுமோ அதற்காக மக்களனைவரும் உழைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா கூறினார்

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

வவுனியாவில் மாவை சேனாதிராசாவுக்கும் TNA முக்கியஸ்தர்களிடையே வாக்குவாதம்!


இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசாவுக்கும் வவுனியா கட்சி முக்கியஸ்தர்களுக்கு மிடையில் நேற்று முன்தினமிரவு வவுனியாவில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வன்னி மாவட்ட வேட்பாளர் தெரிவு தொடர்பாக வவுனியா கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்களுடைய கருத்துக்களை அறியாது கூட்டமைப்பு கொழும்பில் கூடி வேட்பாளர்களை தெரிவு செய்தமை ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் கடும் ஆட்சேபம் வவுனியாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களில் முன்னாள் எம்.பி.க்கள் சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் உள்ளிட்ட ஒன்பது பேரின் பெயர்கள் சிபார்சு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் முன்னாள் மன்னார் மாவட்ட எம்.பி. எஸ். சூசைதாசனின் பெயரும் இடம் பெற்றுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.