ம ட்டக்களப்பில் நான்கு பெரியார்களின் சிலைகள் உடைக்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான விசாரணையை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு கூறியுள்@ளாம். இது தொடர்பில் இந்திய தூதுவரும் என்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார்.
அத்துடன் சேதமாக்கப்பட்ட சிலைகளை விரைவாக மீள் நிர்மாணிக்குமாறு மட்டக்களப்பு மாநகர சபையின் @மயருக்கும் தெரிவித்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பு நகரில் மிகவும் பழமைவாய்ந்த மகாத்மா காந்தியின் உருவச் சிலை மற்றும் சாரணர் இயக்கத்தின் தந்தை என போற்றப்படும் @படன் பவலின் உருவச் சிலை மட்டக்களப்பு ஆனைப்பந்தி வித்தியாலயத்தில் அமைந்திருந்த ”வாமி விபுலானந்தர் உருவச் சிலை மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்துக்கு முன்பாக நிறுவப்பட்டிருந்த புலவர் மணி ஏ. பெரியத்தம்பிபிள்ளை ஆகியோரின் உருவச் சிலைகளே இவ்வாறு உடைத்து நாசம் விளைவிக்கப்பட்டுள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’