வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

வாஷிங்டனுக்கு வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பை ஹிலாரி அழைக்கவில்லை: அமெரிக்க தூதரகம்


மெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹிலாரி கிளின்டனுக்கும் தமிழ் தேசிய கூட்டடமைப்புக்கும் இடையிலான சந்திப்புக்கான ஏற்பாடு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் தெரிவித்துள்ளது. வாஷிங்டனுக்கு வருமாறு தமிழ் தேசிய கூட்டடமைப்பினருக்கு அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹிலாரி கிளின்டன் அழைப்பு விடுத்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது எனவும் அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்திப்பதற்காக மே 18ஆம் திகதி வாஷிங்கடன் வருமாறு ஹிலாரி கிளின்டன் அழைப்பு விடுத்துள்ளார் எனவும் குறி;த்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளுடனும் அமெரிக்கா தொடர்பினை பேணும் நிலையில் ஜீ.எல்.பீரிஸ் - ஹிலாரி கிளின்டன் சந்திப்புக்கு முன்னரோ அல்லது பின்னரே தமிழ் தேசிய கூட்டடமைப்பினரின் அமெரிக்க விஜயத்திற்கான ஏற்பாடு எதுவுமில்லை என மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’