வடமராட்சி பருத்தித்துறையில் நேற்று புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பருத்தித்துறை தும்பளை மணியகாரன் தோட்டத்தில் இடம்பெற்ற மிக மோசமான வாள்வெட்டுச் சம்பவத்தில் இரு சகோதரர்கள் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திரைப்படக் காட்சியில் வருவது போல் மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட குழுவினரே பலசரக்குக் கடை நடத்திய சகோதரர் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்ட அண்ணன் அதனைத் தடுக்கச் சென்றபோது அவர் மீதும் ஆயுததாரிகள் வாளால் தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சகோதரர்களான சேனாதிராஜா பாலதாஸ் (27 வயது), அவரது சகோதரரான சே. கார்த்திபன் (25 வயது) இரு குடும்பஸ்தர்களும் தலையில் பலத்த வாள்வெட்டுக் காயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொது மக்கள் பார்த்திருக்க இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது பொலிஸார் வந்ததும் ஆயுததாரிகள் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’