வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 19 ஏப்ரல், 2012

ராமர் பால விவகாரம் : இந்திய மத்திய அரசு தீர்மானம் மேற்கொள்ளாது



லங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலுள்ள ராமர் பாலத்தை இந்தியாவின் தேசிய சின்னமாக பிரகடனப்படுத்த வேண்டுமென ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனு தொடர்பாக தான் நிலைப்பாடு எதையும் மேற்கொள்ளப்போவதில்லை எனவும் இந்திய மத்திய அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது. ராமர் பாலம் இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள் என்றும் இதுதொடர்பாக மத்திய அரசு தனது முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் மனுதாரரான சுப்ரமணிய சுவாமி வலியுறுத்தியிருந்தார். இதைடுத்து ராமர் பாலத்தை தேசிய சின்னமாக பிரகடனப்படுத்தக முடியுமா என்தை இந்திய மத்திய அரசாங்கத்தை இந்திய உச்ச நீதிமன்றம் (உயர் நீதிமன்றம்) கோரியிருந்தது. இந்நிலையில் இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜரான இந்திய மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் ஹரீன் ராவல், இவ்விடயத்தில் இந்திய அரசு தீர்மானம் எதையும் மேற்கொள்ளப்போவதில்லை என அறிவித்தார். இவ்வழக்கு விசாரணையை ஓகஸ்ட் 3 ஆம் வாரத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’