வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

ஒசாமா குடும்பத்தினர் நாடுகடத்தப்பட்டனர்



ல் கயீடா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின் லேடனின் விதவை மனைவியர் மூவரையும் அவர்களின் பிள்ளைகளையும் சவூதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் நாடு கடத்தியுள்ளது.
கடந்த வருடம் மே 2 ஆம் திகதி பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் வைத்து அமெரிக்கப் படையினரின் முற்றுகையின்போது ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் இடம்பெற்று ஒருவருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில ஒசாமாவின் குடும்பத்தினரை பாகிஸ்தான் நாடு கடத்தியுள்ளது. ஓசாமாவின் மனைவிகள் மூவரையும் மூத்த புதல்விகள் இருவரையும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த குற்றச்சாட்டின் காரணமாக 45 நாள் தடுப்புக்காவலில் வைக்குமாறும் அதன்பின் நாடுகடத்துமாறும் பாகிஸ்தான் நீதிமன்றமொன்று உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த வீட்டிலிருந்து நேற்று நள்ளிரவு மினி பஸ் ஒன்றில் ஏற்றப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை காலை விசேட விமானமொன்றின் மூலம் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டனர். பாகிஸ்தானிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களில் ஒசாமாவின் மனைவியர் மூவர், ஒசாமாவின் 8 பிள்ளைகள், ஒரு பேரப்பிள்ளை ஆகியோர் அடங்குகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’