வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

இலங்கைப் பயணம்: மே 3இல் தனது தலைமையிலான குழுவினரிடம் விவாதிக்கிறார் சுஷ்மா



லங்கைப் பயணம் குறித்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தனது தலைமையிலான குழுவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மே 3 ஆம் திகதி விவாதிக்கவுள்ளதாகவும் இது தொடர்பாக எம்.பி.க்களுக்கு அவர் அழைப்பு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ் மக்களின் நிலைமை குறித்தும், இந்தியாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் மறுவாழ்வுத் திட்டங்களை ஆராயவும் நாடாளுமன்றத்தின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் குழு இலங்கையில் 6 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை பயணம் செய்த அந்தக் குழுவுக்கு சு~;மா ஸ்வராஜ் தலைமை வகித்தார். அந்தக் குழு இந்தியா திரும்பியதும் உடனடியாகப் பிரதமரிடம் தனது அறிக்கையை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத்தின் பல்வேறு அலுவல்களில் சுஷ்மா ஈடுபட்டதால், அந்தக் குழு கூடி விவாதிக்கவில்லை. இதற்கிடையில், நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களான சுதர்சன நாச்சியப்பன், எம். கிருஷ்ணசாமி, என்.எஸ்.வி. சித்தன், மாணிக் தாகூர் ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கை வெள்ளிக்கிழமை சந்தித்து, தனியாக ஓர் அறிக்கையை அளிக்க இருக்கின்றனர். இலங்கைக்கு பயணம் செய்த குழு நாடாளுமன்றத்தில் தனது அறிக்கையைத் தாக்கல் செய்யுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 'இலங்கைக்கு இந்திய எம்.பி.க்கள் குழு சென்றிருந்தாலும், அந்தக் குழுவை மத்திய அரசுதான் அனுப்பிவைத்தது. நாடாளுமன்ற அமைச்சகம் எம்.பி.க்களுக்கான பயண ஏற்பாட்டை மட்டும் செய்தது. அதனால், இலங்கைப் பயணம் பற்றிய அறிக்கையை சுஷ்மா ஸ்வராஜ் குழு நாடாளுமன்றத்திடம் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை" என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இலங்கைப் பயணத்தின் போது, இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவை சுஷ்மா ஸ்வராஜ் முதலில் தனியாகவும், பின்னர் குழுவினருடனும் சந்தித்தது குறித்து இதுவரை விளக்கம் அளிக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’