வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளின் அமுலாக்கம் குறித்து பங்காளிக் கட்சிகளின் ஆலோசனையை கோருகிறது அரசு



ற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவது தொடர்பில் அமெரிக்காவுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கு ஆலோசனை வழங்கும்படி அரசாங்கம் தனது பங்காளிக் கட்சிகளைக் கேட்டுள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான ஒரு வேலைத்திட்டத்துடன், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அடுத்த மாதம் வொஷிங்டன் செல்லவுள்ளார். அவர் அங்கு இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனை சந்தித்துப் பேசுவார். இது தொடர்பில் தத்தம் அபிப்பிராயங்களை முன்வைக்கும்படி கூட்டமைப்பின் பங்காளிகளை அரசாங்கம் கேட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அமைச்சர் டியூ.குணசேகர கற்றுக்கொண்ட மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்குவது தொடர்பில் தனது கட்சிக்கு பிரச்சினை ஏதும் இல்லையென தெரிவித்தார். அமைச்சர் ஹக்கீம் தனது கட்சி அடுத்த வாரம் அதன் அறிக்கையை சமர்பிக்கும் என்றார். அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தின் அமர்வில் இலங்கை ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’