வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 26 ஏப்ரல், 2012

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் குற்றவாளியென தீர்ப்பு


பாகிஸ்தான் பிரதமர் யூஸுப் ரஸா கிலானி நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியென அந்நாட்டு உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. எனினும் அவருக்கு நீண்ட சிறைத் தண்டனை எதுவும் விதிக்கப்படவில்லை. அடையாள தண்டனையாக, நீதிமன்ற அமர்வு முடியும்வரை அவரை தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
பாகிஸ்தான் ஜனாதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவை பிரதமர் கிலானி தலைமையிலான அரசாங்கம் புறக்கணித்ததால் பிரதமர் கிலானிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. \4 ஆவது இலக்க நீதிமன்ற அறையில் நடைபெற்ற இன்றைய நீதிமன்ற அமர்வு 10 நிமிடங்களுக்கு குறைவான நேரமே நீடித்தது. பிரதமர் யூஸுப் ரஸா கிலானி குற்றவாளியென நீதியரசர் நஸீர் உல் முல்க் தலைமையிலான 7 பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பின் பின்னர் உடனடியாகவே நீதிபதிகள் அங்கிருந்து வெளியேறினர். அதனால் பிரதமர் கிலானி மீதான தண்டனை முடிவுக்கு வந்தது. சட்டத்தின்படி, அவருக்கு அதிகபட்சமாக 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்படுவதற்கு வாய்ப்பிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் பிரதமராக பதவி வகிப்பதற்கு கிலானி தகுதியானவரா இல்லையா என்பது குறித்து சட்ட நிபுணர்கள் மாறுபட்ட அபிப்பிராயங்களை தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தின் விரிவான தீர்ப்பு அறிக்கையே இவ்விடயத்தில் தெளிவு ஏற்படுத்தும் என அவர்கள் கூறினர். நீதிமன்றத்தைவிட்டு வெளியே வந்த பிரதமர் கிலானி, ஊடகங்களிடம் பேசுகையில், 'நாம் நீதியை நாடினோம். இத்தீர்மானம் பொருத்தமானது அல்ல' என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’