வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 26 ஏப்ரல், 2012

முல்லைத்தீவு சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம்!



முல்லைத்தீவு மாவட்ட தகுதிகான் சுகாதாரத் தொண்டர்களுக்கு இவ்வருட இறுதிக்குள் நிரந்தர நியனம் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
காரைச்சி குடியிருப்பு மைனா முன்பள்ளியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மாவட்ட சுகாதாரத் தொண்டர்களுடனான சந்திப்பின் போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார். முல்லைத்தீவு மாவட்டத்தில் சுகாதாரத் தொண்டர்களாக நீண்ட காலமாகப் பணியாற்றுவோரில் 120 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ள நிலையில் தகுதியுள்ள ஏனையயோருக்கும் நியமனங்களை ஆனி ஆடி மாதங்களில் வழங்குவது தொடர்பில் துறைசார்ந்தோர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் பட்சத்தில் அவற்றை சரியாகவும் செம்மையாகவும் பயன்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். மாவட்டத்தின் 04 சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையைச் சேர்ந்த சுகாதாரத் தொண்டர்கள் இதில் கலந்து கொண்டனர்.







0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’