வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 24 மார்ச், 2012

முதல் முறையாக தர்மபுரம் நாகேந்திரபுரம் புளியம்பொக்கனை விவசாயிகள் கல்மடு குளத்தின் கீழ் சிறுபோக செய்கை - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் நடவடிக்கை.


கிளிநொச்சி கல்மடு குளத்தின் கீழ் வரலாற்றில் முதல் முறையாக தர்மபுரம் நாகேந்திரபுரம் புளியம்பொக்கனை கிராம விவசாயிகள் சிறுபோக நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று (24) புளியம்பொக்கனை கமநல சேவைகள் நிலையத்தில் இடம்பெற்ற கல்மடு குளத்தின் கீழான சிறுபோக நீர்விநியோகத் திட்ட கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் யுத்த காலத்தில் உடைக்கப்பட்ட கல்மடுகுளம் மீள புனரமைக்கப்பட்ட பின்பு நீர் கொள்ளளவு மட்டம் 21 அடியிலிருந்து 24 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே எம்மால் உறுதியளிக்கப்பட்டதற்கு அமைவாகவும் அரசின் அறிவிப்புக்கு அமைவாகவும் இம்முறையிலிருந்து மேற்படி கிராம மக்களும் சிறுபோக நெற்செய்கையில் ஈடுபடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இம்முறை கல்மடு குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கையின் பரப்பளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் எந்த பிரதேச விவசாயிகளும் பாதிக்கப்படாத வகையில் புதிய பிரதேசங்களும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. எனவே முப்பது வருடத்திற்கு மேலான மேற்படி விவசாயிகளின் கோரிக்கை இம்முறை நிறைவேற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். இந்த தடவை கல்மடு குளத்தின் கீழ் கண்டாவளை-350ஏக்கர் கல்மடு-90ஏக்கர் தர்மபுரம் - 80ஏக்கர் நாகேந்திரபுரம்-40ஏக்கர் புளியம்பொக்கனை-75ஏக்கர் பரப்பளவில் நெற்செய்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இதனடிப்படையில் விவசாயிகள் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களுக்கு அமைவாக நீர்விரயங்கள் ஏற்படாத வகையில் திட்டமிட்டு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் நீர்விநியோக கால்வாய்கள் புனரமைக்கப்பட்டு சீரான நீர்விநியோகம் மேற்கொள்ளப்படுகின்ற போது பயிர்ச் செய்கையின் பரப்பளவு மேலும் அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்த அவர் உரிய கால அட்டவணைகளுக்கு அமைவாக விதைப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகளைக் கேட்டுக் கொண்டார். இக்கூட்டத்திற்கு கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறீனிவாசன் கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் விகிர்தன் சுதாகரன் கண்டாவளை உதவித் திட்டப் பணிப்பாளர் பிரதித் திட்டப் பணிப்பாளர் மற்றும் விவசாயத்துறை சார்ந்த திணைக்களங்களின் அதிகாரிகளும் கல்மடுக்குளத்தின் கீழ் பயர்ச்செய்கையினை மேற்கொள்ளும் திட்டக் குழுக்களின் பிரதிநிதிகளும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.












0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’