வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 24 மார்ச், 2012

வெளிநாட்டு ஊடகங்களிலும் மேர்வினின் சர்ச்சைக்குரிய கருத்து


லங்கைக்கு எதிராக வெளிநாடுகளுக்குச் சென்று கருத்துகளைக் கூறும் ஊடகவியலாளர்கள் நாட்டுக்குள் கால்வைத்தால் அவர்களின் கை, கால்களை உடைப்பேன் என பொதுமக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ள
கருத்தானது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இக்கருத்தானது வெளிநாட்டு ஊடகங்களிலும் வெளியாகியுள்ளதுடன் இலங்கையில் ஊடகவியல் சுதந்திரம் தொடர்பிலும் கேள்வி எழுப்பியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று கிரிபத்கொடையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் இக்கருத்தினைத் தெரிவித்திருந்தார். ஊடகவியலாளர் போத்தல ஜயந்தவைத் தானே இந்த நாட்டிலிருந்து துரத்தியதாகவும், இத்தகைய ஊடகவியலாளர்கள் நாட்டுக்குள் கால்பதித்தால் அவர்களின் கை, கால்கள் அடித்து உடைக்கப்படும் எனவும் அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’