வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 7 மார்ச், 2012

ஆனையிறவு உப்பளப் பகுதிக்கு அமைச்சர் விஜயம்!

னையிறவு உப்பளப் பகுதியில் அலுவலகம் அமையப்பெறவுள்ள பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் புனரமைப்புப் பணிகளையும் பார்வையிட்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
ஆனையிறவு உப்பளத்திற்கான அலுவலகங்களின் புனரமைப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் அப்பகுதிக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் வேலைத்திட்டங்களைப் பார்வையிட்டார். அத்துடன் மேலும் புனரமைக்கப்பட வேண்டிய கட்டடங்கள் தொடர்பாகவும் அப்பகுதிக்கான வீதியை செப்பனிடுவது தொடர்பாகவும் துறைசார்ந்தவர்களிடம் கேட்டறிந்து கொண்டதுடன் பணிகளைத் துரிதப்படுத்துமாறு உரிய அதிகாரிகளிடம் பணிப்புரை வழங்கினார். இதன்போது பாரம்பரிய கைத்தொழல்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி ஈ.பி.டி.பி.யின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’