வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 7 மார்ச், 2012

ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் பள்ளியில் பேய் நடமாடுவதாக பீதி: மின் விசிறி தானாக ஓடும் அதிசயம்- வகுப்பறைக்குள் செல்ல மாணவிகள் அச்சம்


ரோடு வீரப்பன்சத்திரத்தில் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி உள்ளது. சுமார் ஆயிரம் மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் இப்போது திடீரென ஒரு பீதி நிலவி வருகிறது. பள்ளியில் பேய் நடமாடுவதுதான் அந்த பீதி. இந்த கம்ப்யூட்டர்... இண்டர்நெட் காலத்தில் பேயாவது... பிசாசாவது... என்று கேட்கலாம். ஆனால்,
என்னை பேய் பயமுறுத்தியது... என்னை விரட்டியது... என்று அப்பள்ளி மாணவிகள் கடந்த சில நாட்களாக கூறி வருவதை நம்பாமலும் இருக்க முடியவில்லை. பள்ளி வகுப்பறையை சில மாணவிகள் பெருக்கி சுத்தம் செய்வார்கள். இப்படிதான் ஒரு மாணவி தனது வகுப்பறையை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது திடீரென யாரோ ஒருவர் அந்த மாணவியின் பின்புறம் நின்றுகொண்டு தள்ளி விட்டதாம். திடீரென தன்னை தள்ளி விட்டதை உணர்ந்த அந்த மாணவி திரும்பி பார்க்க அங்கு யாரும் இல்லை. இதைகண்ட அந்த மாணவி வகுப்பறையில் இருந்து எடுத்தார் ஓட்டம். இந்த விஷயத்தை சக மாணவிகளிடம் அவர் சொல்ல மற்ற மாணவிகளுக்கு கிலி ஏற்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் மின் விசிறி உள்ளது. தலைமை ஆசிரியர் வகுப்பறைக்கு செல்லும்போது அந்த மின் விசிறியை நிறுத்தி உள்ளார். மின் விசிறியும் நிற்க... அவர் அந்த அறையை விட்டு வெளியே செல்கிறார். 5 அல்லது 10 நிடிடம் கழித்து அவர் மீண்டும் தனது அறைக்கு வரும்போது, அந்த மின் விசிறி ஓடி கொண்டிருக்கிறது. இதை கண்ட அவருக்கும் ஒருவித படபடப்பு... மின் விசிறியை நிறுத்தி கொண்டு போனோம். ஆனால், இப்போது ஓடுகிறது... இது எப்படி? என அவருக்கும் ஒரே குழப்பம். இது பற்றி அவரும் வெளியே இந்த விஷயத்தை சொல்ல மேலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. வீரப்பன்சத்திரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேய் உலா வரும் செய்தி அப்பகுதி முழுவதும் பரவி... ஈரோடு மாநகரையும் தொற்றிக் கொண்டது. பேய் நடமாட்டம் உண்டோ... பொய்யோ... வதந்தியோ... பீதியோ... எப்படி இருந்தாலும் உடனடியாக இந்த பேய்க்கு ஒரு பரிகாரம் செய்ய வேண்டும். அல்லது ஆவி விரட்டுபவரை அழைத்து வந்து இந்த பேயை விரட்டியடிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இப்போதைக்கு அந்த பள்ளியில் எலுமிச்சை பழம் மற்றும் சில பொருட்களை வைத்து கட்டி தொங்க விட்டுள்ளனர். பல இடங்களில் மாணவிகள் வேப்பிலையையும் சொருகி வைத்துள்ளனர். இந்த பேய் நடமாட்ட பீதிக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அப்போதுதான் மாணவிகள் மத்தியில் அச்சம் நீங்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’