சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமோக வெற்றிபெற்றுள்ளது;திமுக உள்ளிட்ட ஏனைய கட்சிகள் அனைத்தும் டெபாசிட் இழந்தன.
வாக்குகள் எண்ணப்பட்ட 18 சுற்றுக்களிலும் முன்னிலை வகித்த அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி மொத்தமாக 94,977 வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார்.இரண்டாவது இடத்தில் உள்ள திமுக வேட்பாளர் 26,220 வாக்குகளையே பெற்றார்; 407 வாக்குகள் குறைவாகப் பெற்றதால் அவர் டெபாசிட் (கட்டுப்பணம்) இழந்தார். அடுத்தபடியாக வைகோ தலைமையிலான மதிமுக வேட்பாளர் 20,675 வாக்குகளையும் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக வேட்பாளர் 12,144 வாக்குகளையும் பாஜக வேட்பாளர் 1,633 வாக்குகளையும் பெற்றனர். அமைச்சர் கருப்பசாமியின் மறைவையடுத்து சங்கரன்கோவில் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 18ம் திகதி நடத்தப்பட்டது. 13 பேர் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் ஒரு லட்சத்து 59,772 பேர் வாக்களித்திருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’