இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளத் தான் தயாராக இருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் உயரதிகாரி நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளதாக இணையச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.
எனினும் அதற்கான திகதி இதுவரை தீர்மானிக்கப்படவிலை எனவும் அவர் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமை குறித்து நடைபெற்ற ஓரு கூட்டத்தில் கலந்துகொண்ட போதே நவநீதம்பிள்ளை இதனை அறிவித்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து ஜெனீவா நகரில் ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் 19ஆவது கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில், அமெரிக்கா இலங்கை மீது கொண்டு வந்துள்ள தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவு திரட்ட அமெரிக்காவும் இதற்கு எதிராக ஆதரவினை திரட்டும் நடவடிக்கைகளில் இலங்கை அரசும் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றன. இது குறித்துக் கருத்துதெரிவித்த நவநீதம்பிள்ளை, இலங்கை அரசு தம்மை வரும்படி அழைத்துள்ளதாகவும் அவ்வழைப்பு கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே தனக்குக் கிடைத்ததாகவும் தெரிவித்தார். தான் இலங்கை செல்ல முன்னர் தனது அலுவலகத்திலிருந்து பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளதாகவும் இதன்போது நவநீதம்பிள்ளை குறிப்பிட்டார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’