வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 20 மார்ச், 2012

யுத்தத்திற்கு அர்ப்பணிப்பு செய்தோர் செங்கல் சூளையில் கே.பி.யோ இராஜபோகம்


யாழ்ப்பாணத்திலோ கிளிநொச்சியிலோ முல்லைத்தீவிலோ எங்கும் வடக்கின் வசந்தத்தை காண முடியவில்லை. ஆனால் வடக்கின் வசந்தம் எவரது சட்டைப் பைக்கு போகிறதோ தெரியவில்லையென ஐ.தே.கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
யுத்தத்திற்கு அர்ப்பணிப்பு செய்தோர் இன்று செங்கல் சூளையில் வேலை செய்கின்றனர். கே.பி. இராஜபோகம் அனுபவிக்கின்றாரென்றும் எதிர்க்கட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். வெலிஓயா பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பொது மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து உரையாற்றியுள்ளதாவது, கடந்த சில தினங்கள் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு கிளிநொச்சி பிரதேசங்களுக்கு விஜயம் செய்தோம். ஆனால் எங்கும் வடக்கின் வசந்தத்தை காண முடியவில்லை. ஆனால் வடக்கின் வசந்தம் யாரோ ஒருவரது சட்டைப் பைக்குள் போய்ச் சேருகிறது. இப் பிரதேசங்களில் யுத்தத்திற்கு முகம் கொடுத்த மக்களும் பாதிக்கப்பட்ட மக்களுமே வாழ்கின்றனர். இவர்களை வாழ வைப்பதற்கோ பாதுகாப்பதற்கோ அரசாங்கத்திடம் எதுவிதமான திட்டமும் இல்லை. அன்று யுத்தம் செய்த அர்ப்பணிப்புடன் போராடிய எமது இளைஞர்கள் வெலிஓயா பிரதேசங்களில் செங்கள் சூளைகளில் கஷ்டப்படுகின்றனர். கே.பி.யையும் இச் சூளைகளில் வேலைக்கு அனுப்பலாமே. ஆனால் அரசாங்கம் கே.பி.க்கு ராஜ உபசாரத்தை வழங்கி பாதுகாக்கின்றது. அம்பாந்தோட்டையில் கப்பல் வராத துறைமுகமொன்று நிர்மாணிக்கப்பட்டது. ரூபா 2160 செலவு செய்து அம்பாந்தோட்டை சூரியவௌ காட்டுப்பகுதியில் கிரிக்கட் மைதானமொன்று அமைக்கப்பட்டது. அந்த மைதானத்தை இப் பிரதேசத்தில் அமைத்திருந்தால் நல்ல பயன்களைப் பெற இருந்தது. இப் பிரதேசத்தில் வாழும் இளைஞர்களுக்கு தொழில் இல்லை. பாடசாலைகளில் அபிவிருத்தி இல்லை. சிவில் பாதுகாப்பு பிரிவினருக்கு கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப் பிரதேசத்தில் உள்ளோர் மாதமொன்றுக்கு 2000 செங்கற்கள் தயாரிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியே போக முடியாது. ஆனால் அனைத்து அபிவிருத்திகளும் அம்பாந்தோட்டைக்கே கொண்டு செல்லப்படுகின்றது. தேர்தல் வடக்கில் பிரதேச சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் அச்சப்படுகின்றது. தேர்தல் நடந்தால் தோல்வி நிச்சயம். இதற்காக ரிசாட் பதியுதீனை பயன்படுத்தி அவர் மூலம் இருவரை நியமித்து தேர்தலை ஒத்திவைப்பதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு மூலம் தேர்தலை ஒத்திவைத்து தோல்வியை தவிர்க்க அரசு முயற்சிக்கின்றது என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’