வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 20 பிப்ரவரி, 2012

வடபகுதி கூடைபந்தாட்ட அணியினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீர வீராங்கனைகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களை அமைச்சர் அவர்களது கொழும்பு வாசஸ்தலத்தில் இன்று (19) சந்தித்துக் கலந்துரையாடினர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
49வது சிரேஷ்ட தேசிய மட்ட போட்டியில் கலந்து கொள்ள யாழ் கூடைப்பந்தாட்ட சங்க செயலாளர் எஸ்.ரமணன் அவர்களின் வழிகாட்டலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் அணியினரும் கிளிநொச்சி வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்கள் அணியினரும் கொழும்புக்கு வருகை தந்திருந்தனர். இதில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் அணியினர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அதேவேளை வவுனியா கிளிநொச்சி யாழப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்கள் அணியினர் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். அங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடும் முயற்சியினால் பல போட்டிகளில் வெற்றிபெற்று முன்னேறி வந்துள்ள நீங்கள் இறுதிப் போட்டியிலும் வெற்றி பெறுவதற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். அதேவேளை போட்டிகளில் கலந்து கொள்வதற்கு ஏதாவது தேவைகள் மற்றும் உதவிகள் தேவைப்படின் தனது கவனத்திற்கு கொண்டு வரும்படியும் அதனை தான் நிவர்த்தி செய்வதாகவும் உறுதிமொழி வழங்கினார். கொழும்பு வந்துள்ள விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கான உணவு மற்றும் தங்குமிட வசதிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’