வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 20 பிப்ரவரி, 2012

ஐக்கியத்துக்கான முயற்சிகளை அடையாளப்படுத்துகிறது மகா சிவராத்திரி! - ஜனாதிபதி

றியாமை இருளகற்றி அறிவுத்தீபத்தை ஏற்றிவைப்பதற்கும் தமது சொந்த சமூக வாழ்க்கையில் ஐக்கியத்தையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதற்கான அதிசிறந்த முயற்சிகளை மகா சிவராத்திரி அடையாளப்படுத்தி நிற்கிறது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது சிவபெருமானைப் போற்றி அனுஷ்டிக்கப்படும் மகா சிவராத்திரியை முன்னிட்டு இலங்கை வாழ் இந்துக்களுக்கு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். விரதம் அனுஷ்டித்தல் கோயில்களில் இரவில் கண் விழித்திருத்தல் விளக்கேற்றல் சிவபெருமானைப் போற்றி தேவாரம் பாடுதல் போன்ற கிரியைகளின் மூலம் உலகெங்கிலும் வாழும் இந்துக்கள் இப் புனித தினத் தைக் கொண்டாடுகின்றனர். அறியாமை இருளகற்றி அறிவு தீபத்தை ஏற்றி வைப்பதற்கும் தமது சொந்த சமூக வாழ்க்கையில் ஐக்கியத்தையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதற்குமான தொடர்ச்சியான மனித முயற்சிகளை மகா சிவராத்திரி அடையாளப்படுத்தி நிற்கின்றது. இலங்கை வாழ் இந்துக்கள் பல நூற்றாண்டுகளாக ஏனைய சமூகங்களைச் சேர்ந்த மக்களுடன் சகோதரத்துவத்துடனும் சுபீட்சத்துடனும் நல்லிணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். நாடெங்கிலும் தற்போது நிலவுகின்ற அமைதியான சூழலில் இந்த முக்கியத்துவம் வாய்ந்த சமய நிகழ்வை அவர்கள் உண்மையான சகோதரத்துவ உணர்வுடனும் பயபக்தியுடனும் கொண்டாடுகின்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மகா சிவராத்திரி தினத்தில் அவர்கள் செய்யும் பிரார்த்தனைகள் அவர்களது நல்வாழ்வுக்கு பலமாக அமையும் அதேநேரம் நாட்டிலுள்ள எல்லா சமூகங்கள் மத்தியிலும் ஐக்கியத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்பவும் உதவ வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன். இலங்கை வாழ் இந்துக்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த மகா சிவராத்திரி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வளமானதோர் எதிர்காலத்திற்கான அவர்களது எதிர்பார்ப்புகள் நிறைவேற எனது வாழ்த்துக்கள் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’