வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

பேச்சில் முன்னேற்றம் இன்றேல் தெரிவுக்குழுவில் இடம்பெறோம்: ஜனாதிபதியிடம் சம்பந்தன் தெரிவிப்பு


மிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையில் நடைபெற்றுவருகின்ற பேச்சுக்களின் தீர்க்கமான கட்டத்தினை அடையாதவிடத்து நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு நாங்கள் பெயர் கொடுக்க மாட்டோம் என சம்பந்தன் எம்பி ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட அழைப்பின் பேரில் அலரிமாளிகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் இன்று மாலை கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்துகொள்ள வேண்டும் என சம்பந்தனிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டபோதே மேற்படி தனது மறுப்பினை சம்பந்தன் எம்பி வெளிப்படுத்தியுள்ளார். தீர்க்கமான தீர்வொன்று கிடைக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கொண்டுள்ள கொள்கையில் எந்தவித மாற்றமும் ஏற்படாது எனவும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் பேச்சின் மூலம் கிட்டாத பட்சத்தில் எந்தவொரு விட்டுக்கொடுப்பையும் கூட்டமைப்பு மேற்கொள்ளாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட உறுப்பினரொருவர் - தமிழ்மிரருக்கு மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’