கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளிலுள்ள கடைகள், காட்சியறைகள், சுப்பர்மார்க்கெட்டுக்கள் ஆகியவற்றில் 5 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட 22 சம்பவங்களுடன் தேடப்பட்டு வந்த பாரிய கொள்ளைக் கோஷ்டிகளுடன் தொடர்புடையதாகத் தெரிவிக்கப்படும் இரண்டு சந்தேக நபர்கள் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொஹுவல, வெலிக்கடை, அத்துருகிரிய, தலங்கம, மிரிஹான, கடவத்தை, மஹரகம ஆகிய பகுதிகளில் சந்தேக நபரொருவர் பொருட்களை கொள்ளையிட்டதாக தெரியவந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மற்றைய சந்தேக நபர் கொஹுவலவிலுள்ள இலத்திரனியல் காட்சியறையொன்றை உடைக்க முற்பட்டபோது கைதுசெய்யப்பட்டதாகவும் கூறினர். இச்சந்தேக நபரின் காரில்; 3 கையடக்கத் தொலைபேசிகளும் 40 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். கடுவெல பகுதியிலிருந்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரொருவருடன் இணைந்து இச்சந்தேக நபரும் கொள்ளையில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் ஒருவர் கடந்த 2011ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர் எனவும் கைதுசெய்யப்பட்ட இருவரும் கொஹுவல பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். இவர்கள் இலத்திரனியல் உபகரணங்கள், பொருட்கள், நகைகள், பணம், புடவை வகைகளைத் கொள்ளையிட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். இதேவேளை, பாதுக்கை பகுதியில் 1.9 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட கொள்ளைக் கும்பலொன்றுடன் தொடர்புடையதாகத் தெரிவிக்கப்படும் 7 பேர் ஹம்பாந்தோட்டைப் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’