வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 22 பிப்ரவரி, 2012

இலங்கைப் போரில் கண்ணையிழந்த பிரபல அமெரிக்க பெண் பத்திரிகையாளர் சிரியப் போரில் பலி!


லங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது அது தொடர்பான செய்திகளைச் சேகரிப்பதில் கள முனை அனுபவத்தைக் கொண்டிருந்தவரும் உலகப் புகழ்பெற்ற பெண் பத்திரிகையாளரும் புகைப்படப் பிடிப்பாளருமான மேரி கொல்வின் (Marie Colvin) சிரியாவில் இடம்பெறும் போர் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கச் சென்றிருந்த வேளை எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகிக் கொல்லப்பட்டுள்ளார்.
2001ஆம் ஆண்டில் இலங்கையின் வடக்கில் இடம்பெற்ற மோதலில் மேரி கொல்வின் தனது கண்களில் ஒன்றை இழந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளரான இவர், பிரித்தானியப் பத்திரிகை ஒன்றுக்காகச் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த போதே கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவருடன் Remi Ochlik என்ற புகைப்படப்பிடிப்பாளரும் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின்போது கொல்லப்பட்டார். சிரியாவின் ஹொம்ஸ் நகரில் இவர்கள் தங்கியிருந்த வீடு கடுமையான எறிகணைத் தாக்குதலுக்கு இலக்கானது. அங்கிருந்து தப்பிச் செல்வதற்கு இருவரும் முற்பட்டபோது றொக்கட் தாக்குதலுக்கு இலக்காகி அந்த இடத்திலேயே உயிரிழந்ததாக வெளிநாட்டுச் செய்திகள் மூலம் தெரிய வருகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’