வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 4 பிப்ரவரி, 2012

ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும்: சுதந்திர தின உரையில் ஜனாதிபதி


ற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
''வியக்கத்தக்க தாய் நாடொன்றினைக் கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப்பொருளில் அநுராதபுரத்தில் இன்று 64 ஆவது சுதந்திர தின வைபவத்தில் உரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, 'எமது நாட்டைப்பற்றி சர்வதேசம் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கின்றது. அதற்கு எமது நாட்டிலுள்ள சில பிரிவினைவாத சக்திகள் துணைபோகின்றன. நாம் அதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பாராளுமன்றத்தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் தலையீடு இன்றி தெரிவுக்குழுவின் ஊடாக எமது பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சகல கட்சிகளும் பங்கேற்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நவீன காலத்தின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவேண்டிய தேவையும் உள்ளது. அதற்கான நடவடிக்கையை கிரமமான முறையில் முன்னெடுக்க வேண்டும். சகல மக்களும் இன மத பேதமின்றி சுதந்திரமாக வாழ வேண்டுமென்பதே எனது விருப்பமாகும் என்றார். __

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’