இ லங்கை தொடர்பாக பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சியினால் தயாரிக்கப்பட்ட 'இலங்கையின் கொலைக்களங்கள்' வீடியோபடம் அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் திரையிடப்படவுள்ளதாக ட்ரூத்டைவ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
கலிபோர்னியா மாநிலத்தின் பாலோ அட்லோ நகரின் 3990 வென்சுரா கோர்ட்டிலுள்ள வென்சுரா சமூக நிலையத்தில் இந்த வீடியோ திரையிடப்படவுள்ளதாக மேற்படி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் அதிகாரி ஜிம் மெக்டொனால்; இலங்கை விவகாரம் தொடர்பான நிபுணரும் சமசமிதி நிதிய அதிபருமான கிருஷாந்தி தமராஜ் ஆகியோரின் உரைகளும் இதன்போது இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் உள்ளூர் குழுக்களான குழு 19 பாலா அட்லோ, குழு 35 சான் ஜோஸ் குழு 466 சான் மட்டாவோ ஆகியனவற்றின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’