ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினரால் புனித குர் ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்திற்காக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மன்னிப்பு கோரியுள்ளார்.
இது கவனக்குறைவான ஒரு பிழை என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாய்க்கு அனுப்பியுள்ள கடிதமொன்றில் ஒபாமா குறிப்பிட்டுள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபை பேச்சாளர் திமோதி விடேட்டர் இன்று வியாழக்கிழமை கூறியுள்ளார். இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாதிருப்பதற்காக, பொறுப்பானவர்களை பதில்கூறச் செய்தல் உட்பட பொருத்தமான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம் என ஒபாமா தெரிவித்துள்ளார். இதேவேளை, நேட்டோ படையினர் மீது ஆப்கானிஸ்தான் தேசிய இராணுவத்தின் சீருடை அணிந்திருந்த நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததால் நேட்டோ படையினர் இருவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தலைமையிலான சர்வதேச பாதுகாப்பு உதவிப் படையினர் தெரிவித்துள்ளனர். புனித குர் ஆன் எரிப்புச் சம்பவத்திற்கு பழிவாங்குவதற்காக இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதா என சர்வதேச படையின் பேச்சாளர் ஒருவரிடம் கேட்டபோது, 'அம்மாகாணத்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது' என அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’