எட்டு மாத காலத்திற்குள் ஐந்து இளம் பெண்களை திருமணம் செய்ததாக கூறப்படும் 28 வயதான நபர் ஒருவரை சிலாபம் பொலிஸார் இன்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.
இந்நபர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர் எனவும் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தன்னை தொழிலதிபர் போல் காட்டிக்கொண்ட அவர், மேற்படி மனைவிமார்களின் நகைகளை அடகுவைத்து 3.2 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளதகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சந்தேக நபரிடமிருந்து இரு திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் 400,000 ரூபா பெறுமதியான நகைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவர் மோசடியாக திருமணங்களை செய்வதற்கு முன்னர் இரண்டரை வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தவர் ஆவார். இவர் திருமணம் செய்த பெண்களில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர் ஒருவர், வெளிநாட்டில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பிய ஒருவர் ஆகியோரும் அடங்குகின்றனர். அதேவேளை முஸ்லிம் இளைஞரைப் போல் நடித்து, இரு முஸ்லிம் யுவதிகளையும் அவர் திருமணம் செய்துள்ளார். இவர் திருமணம்செய்த பெண்கள், வலஹாபிட்டிய, செல்ல கதிர்காமம், ராஜாங்கனை, பந்துரவ, கல்நெவ ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர். 2011 ஜூன் மாதத்திற்கும் 2012 ஜனவரி மாதத்திற்கும் இடையில் இத்திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இவர் பெரும்பாலும் பஸ்ஸில் பயணம் செய்யும்போதே பெண்களை தன்வலையில் விழ வைப்பாராம். திருமணம் செய்த பெண்கள் சிலரை இவர் குறுகிய காலத்திற்குள் வெளிநாடுகளுக்கும் அனுப்பியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’