வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 1 பிப்ரவரி, 2012

கிளிநொச்சி முருகானந்தா கல்லூரிக்கு மூன்று மாடி கட்டிடம் - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் உறுதியளிப்பு.

கி ளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரிக்கு இந்த ஆண்டிற்குள் மூன்று மாடி கட்டிடம் அமைத்துத் தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் உறுதியளித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று (31) முருகானந்தா கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவும் ஸ்தாபகர் தின நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் அனைத்தும் கல்லூரிகளுக்கே உரிய வளங்களுடன் இயங்க வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எம்மால் நிச்சயம் மேற்கொள்ளப்படும். அதற்காக கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வட மாகாண ஆளுநர் உள்ளிட்ட கல்வித்துறை சார்ந்தோர் தங்களின் பூரண ஒத்துழைப்பினை வழங்கவுள்ளனர். எனவே எதிர்கால கிளிநொச்சியின் கல்வி வளர்ச்சி இவர்களின் ஒத்துழைப்புடன் வளர்ச்சி நோக்கி செல்லும் என்பதில் சந்தேகமில்லை எனத் தெரிவித்தார். இந்த மாவட்டத்தில் 1500 பேர்கள் பாடசாலைக்கு செல்லும் பருவத்தில் பாடசாலைக்கு செல்லாமல் உள்ளனர் என்பது மிகவும் கவலைக்குரிய விடயமே. எனவே முதலில் இந்த நிலைமையினை மாற்ற வேண்டும். இதற்காக வெறுமனே அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மட்டும் செயற்பட முடியாது அதற்காக ஒட்டுமொத்த சமூகமும் தங்களுடைய பங்களிப்பினை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். முன்னதாக முருகானந்தா ஆரம்ப வித்தியாலயத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் பாடசாலையின் பெயர் பலகையினை திரைநீக்கம் செய்ததோடு தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியிலிருந்து ஒரு இலட்சத்து அறுபது ஆயிரம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட மாணவர்களுக்கான குடிநீர் விநியோக திட்டத்தையும் ஆரம்பித்து வைத்தார். அத்தோடு எதிர்வரும் வாரத்தில் ஜம்பது இலட்சம் ரூபா பெறுமதியான நிரந்தர வகுப்பறைக் கட்டிம் ஒன்றினை அமைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும்; உறுதியளித்தார். மேலும் பாடசாலைகளுக்கு பெற்றோர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினர் அக்கறை செலுத்தவேண்டும். அதில்தான் பாடசாலைகளின் வெற்றி தங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டார். பல துறைகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கொளரவிக்கப்பட்ட இந்நிகழ்வில் பாடசாலை முதல்வர் வரதன் வலயக் கல்விப் பணிப்பாளர் முருகவேல் கோட்டக் கல்வி அதிகாரி இராஜகுலசிங்கம் ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர் செல்வராஜா மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.























0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’