வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 6 பிப்ரவரி, 2012

எலிசபெத் மகாராணியார் மகுடம் சூடி 60 ஆண்டுகள்


லிசபெத் மகாராணியார் முடி சூடி அறுபதாவது ஆண்டு தினம் இன்று. வைர விழாவை முன்னிட்டு மகாராணியார் வெளியிட்ட செய்தியில், தனக்கு கடந்த 60 ஆண்டுகளில் ஆதரவும், ஊக்கமும் தந்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார். விக்டோரியா மாகாராணியாருக்குப் பிறகு இந்த அரச குடும்பத்தில் முடி சூடி 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்தவர் எலிசபெத் மகாராணி மாத்திரந்தான். இந்த ஆண்டு நிறைவை முன்னிட்டு பல நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
ஜூன் மாதத்தில் நடக்கவிருக்கும் வார இறுதி வைர விழா நிகழ்வுகளும் அதில் அடங்குகின்றன. 1952 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி 6வது ஜோர்ஜ் மன்னர் இறந்த போதுதான் எலிசபெத் மகாராணி முடி சூடினார். இந்த வகையில் இன்றைய தினம் மகாராணியாருக்கு ஒரு கொண்டாட்ட தினந்தான். கடந்த அறுபது வருடத்தில் நாட்டின் சமூகப்புரட்சி சூழ்நிலைகளில், மக்களை ஆசுவாசப்படுத்தும் ஒரு குரலாகவே அரச குடும்பம் இருந்துவருகிறது என்று அரசியின் மிகவும் நெருங்கிய தோழியான லேடி பென் கூறியுள்ளார். தன்னுடைய வைர விழாவுக்கான செய்தியில், ''நான் என்னை உங்களது சேவைக்காக மீண்டும் அர்ப்பணிக்கிறேன்'' என்று மாகராணியார் கூறியுள்ளார். தனது 21 வது வயதில் தான் எடுத்துக்கொண்ட வாக்குறுதியை இதன் மூலம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’