வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 6 பிப்ரவரி, 2012

ஜனாதிபதி தலைமையிலான வடமாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டத்தை த.தே.கூ. புறக்கணிப்பு


னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெறவுள்ள வடமாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திர தெரிவித்தார்.
வடமாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொள்வது குறித்து கேட்டபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு கூறினார். தங்களுக்கு உரியமுறையில் அழைப்பு விடுக்கப்படாது நடத்தப்படும் இந்த வடமாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளாது புறக்கணித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவிக்கையில், 'வடமாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கமாட்டாதென்று திட்டவட்டமாக முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள வடமாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டத்தை நாம் புறக்கணிக்கின்றோம். வடமாகாண அபிவிருத்தி தொடர்பாக அதுவும் ஜனாதிபதி பங்கேற்கும் இக்கூட்டத்திற்கு முன்னரே அறிவித்திருக்க வேண்டும். அதை விடுத்து கூட்டம் நடப்பதற்கு முதல் நாளான நேற்று மாலையே தொலைபேசி மூலம் எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். எமது கௌரவத்தை நாங்கள் விட்டுக் கொடுக்கமாட்டோம். அழையாத விருந்தினராக நாங்கள் செல்லமாட்டோம். முறைப்படி அழைப்பு விடுக்கப்படாமையினால் நாங்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளமாட்டோம். இதுவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவாக உள்ளது' என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’