ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கையின் நிலைமைகள் குறித்து ஆராய அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழுவொன்று நாளை ஜெனீவாவுக்கு பயணமாகவுள்ளதாக அரசாங்க உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க தலைமையில் முன்னாள் சட்டமா அதிபரும் அமைச்சரவையின் தற்போதைய ஆலோசகருமான மொஹான் பீரிஸ் மற்றும் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவே இவ்வாறு ஜெனீவாவுக்கு விஜயம் செய்யவுள்ளது. ___
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’