வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

கிறீஸ் பூத வழக்கு 23 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு


யாழ். நாவாந்துறையில் கிறீஸ் பூதம் தொடர்பான பதற்றநிலையை தொடர்ந்து படையினராலும் பொலிஸாராலும் அப்பகுதி பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பழிவாங்கல் நடவடிக்கைதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 61 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையை பெ;ரவி 23 ஆம் திகதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, நீதியரசர்கள், என்.ஜி. அமரதுங்க,, கே. ஸ்ரீபவன் ஆகியோர் ஆகியோர் இத்தீர்மானத்தை அறிவித்தனர். 31 மனுதாரர்கள் சார்பில் கே. கனக ஈஸ்வரன், சாந்தா அபிமானசிங்கம், எம்.ஏ.சுமந்திரன், விரான் கொரையா, பவானி பொன்சேகா, எல். ஜெயகுமார் , ஆர்.கே. குருபரன் ஆகியோர் எம்.எம்.எம். சம்சுதீனின் நெறிப்படுத்தலில் ஆஜராகினர். 11 மனுதாரர்கள் சார்பாக கே.எஸ்.ரத்னவேல் ஆஜரானார். 8 மனுதார்கள் சார்பாக பி.என். தம்பு ஆஜரானார். 6 மனுதார்கள் சார்பாக புவிதரன் ஆஜரானார். ஏனைய மனுதாரர்கள் சார்பாக புலஸ்தி ஹேவமான்ன, பாசிந்து சில்வா, சன்ஜீவ ரணவீர ஆகியோர் ஆஜராகினர். இருதயநாதன் வீனஸ் றெஜி என்பவர் தனது மனுவில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவ தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய, யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க, பொலிஸ் மா அதிபர் இலங்ககோன், பெண் பொலிஸ் அதிகாரி நதீகா, சட்ட மா அதிபர் உட்பட 12 பேரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’