வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

கச்சதீவை மீட்கும்வரை ஓயமாட்டேன்: ஜெயலலிதா


ச்சதீவை இந்தியா மீளப்பெறும் வரை தான் ஓயப்போவதில்லை என தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இன்று கூறியுள்ளார்.
கச்சதீவை மீளப்பெறுவதன் மூலம் மாத்திரமே தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலை நிறுத்தமுடியும் என தமிழக சட்டசபையில் உரையாற்றுகையில் அவர் கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆறுமுகத்தின் உரைக்கு பதிலளித்த ஜெயலலிதா, கச்சதீவை மீளப்பெறுவது தொடர்பான தனது வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது எனவும் கூறினார். இந்த வழக்கை வலுவூட்டும் வகையில் தமிழக நிதியமைச்சும் ஆவணங்களை இணைத்துள்ளது. தமிழக மீனவர்களின் ஜீவனோபாயத்தை பாதுகாப்பதற்காக நான் செயற்படுகின்றேன். கச்சதீவை மீட்கும்வரை ஓயமாட்டேன்' என அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’