வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 2 பிப்ரவரி, 2012

நாடாளுமன்ற தெரிவிக் குழுவில் கூட்டமைப்பு அங்கம் வகிக்க வேண்டும்! - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அங்கம் வகிப்பதனூடாகவே தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரமானதும் உறுதியானதுமான இறுதித் தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ். ஊர்காவற்துறையில் புதிதாக கட்டப்பட்ட பிரதேச சபை தலைமைக் காரியாலயத்தை இன்றைய தினம் (02) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ஒரு ஜனநாயக நாட்டில் பல்வேறு கருத்துக்கள் இருப்பது தவிர்க்க முடியாததும் அவசியமானதும் என்ற போதிலும் இங்கு அக்கருத்துக்கள் முறைகேடாகவும் அவசியமற்ற முறையில் அவதூறாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாம் அதிகாரப் பரவாலாக்கல் என்றில்லாமல் தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வைப் பற்றியே அரசுடன் பேசி வருவதுடன் 13 வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தொடங்கி அதிலிருந்து கட்டம் கட்டமாக முன்னேற முடியும் என்றும் வலியுறுத்தி வருகின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கையற்ற நிலையிலேயே அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை காண்பதற்கு தடையாக அவர்களின் இவ்வாறான செயற்பாடுகள் எடுத்துக் காட்டுவதுடன் பிரச்சினைகளைத் தீராப் பிரச்சினையாக வைத்திருப்பதன் மூலம் தமது சுயலாப அரசியலை முன்னெடுக்கவே அவர்கள் விரும்புகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் நாடாளுமன்றத் தெரிவுக் குழு மூலம் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காணமுடியும் எனவும் அந்த வகையில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசில் தமக்கு மிகுந்த நம்பிக்கையுள்ளதாகவும் இறுதி யுத்தத்தை தடுத்து நிறுத்தி மக்கள் எதிர்கொள்ளப் போகும் பேரழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு அரசுடன் பேசுவோம் வாருங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தாம் அழைப்பு விடுத்ததையும் அதனை அவர்கள் நிராகரித்ததையும் பின்னர் நடைபெற்ற அழிவு யுத்தத்தையும் இதன்போது அமைச்சர் அவர்கள் நினைவுகூர்ந்தார். முன்னைய காலங்களை விடவும் சர்வதேச சமூகம் குறித்த விடயத்தில் அக்கறை கொண்டுள்ள போதிலும் இந்தியா கொண்டுள்ள அக்கறை முக்கியமானது என்பதுடன் இச்சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனமானது எனவும் இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த 10,000 க்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்களில் பெருமளவானோர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையோரும் நிச்சயம் விடுவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். இதனிடையே ஊர்காவற்துறையில் காணப்படும் குடிநீர் மட்டுமல்லாது வீதி செப்பனிடல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் நிச்சயம் தீர்வு காணப்படுமெனவும் தீவகம் முழுவதையும் அபிவிருத்தி செய்வதற்கு முழுமையான பங்களிப்பு வழங்கப்படுமெனவும் 600 இலட்சம் ரூபா இப்பகுதியின் அபிவிருத்தி திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் 03 வருடத்திற்குள் எமது மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்ய முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார். முன்பதாக பிரதான வீதியூடாக மங்கள வாத்தியம் சகிதம் பிரதம விருந்தினர் உள்ளிட்ட விருந்தினர்கள் நிகழ்விடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பெயர்ப்பலகையும், நினைவுக் கல்லும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார். மண்;டபத்தில் ஊர்காவற்துறை பிரதேச சபை தவிசாளர் ம. ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கௌரவ மற்றும் சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றினர். தொடர்ந்து ஊர்காவற்துறை பிரதேச சபையில் கடமையாற்றி ஓய்வு பெற்றவர்களும் புதிய கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளின் பொறியியலாளர்கள் மற்றும் தற்போதைய தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்களும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் பொன்னாடை போர்த்தி மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். மகிந்த சிந்தனை வழிகாட்டலினூடாக உள்ளுராட்சி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் செயற்றிட்டத்தின் உள்ளுராட்சி உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் 520 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடங்களில் முதலாவது கட்டி முடிக்கப்பட்ட இக்கட்டிடம் 27 மில்லியன் ரூபாவில் கட்டப்பட்டுள்ளதுடன் இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் போது யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா ஈ.பி.டி.பி.யின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன் வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஜெகூ பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பிரணவநாதன் ஊர்காவற்துறை உதவி அரசாங்க அதிபர் சிறிமோகனன் நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் ரஜீவ் வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை வேலணை பிரதேச சபைத் தலைவர் போல் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.



























0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’