இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வோர்டன் குழுவினர் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யுத்தத்திற்குப் பின்னரான வட பகுதியின் நிலைமைகள் அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் உட்பட பல்துறை சார்ந்த விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக வடபகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் மக்களுக்கு சென்றடையும் முறைமை குறித்தும் அது தொடர்பில் மக்கள் கொண்டுள்ள அபிப்பிராயங்கள் தொடர்பிலும் இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பங்களிப்பு குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான அமைச்சரின் கருத்துக்களையும் பாராளுமன்ற தெரிவுக்குழு மற்றும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பான அமைச்சரின் நிலைப்பாடுகளையும் மேற்படி குழுவினர் கேட்டறிந்துகொண்டனர். அமைச்சர் அவர்களது கொழும்பு வாசஸ்தலத்தில் நேற்று மாலை இடம்பெற்ற இச்சந்திப்பின்போது மேற்படி விடயங்கள் தொடர்பில் சுமுகமாகக் கலந்துரையாடப்பட்டன. இச்சந்திப்பில் அமைச்சர் அவர்களது ஆலோசகர் திருமதி வி.ஜெகராசசிங்கம் பிரத்தியேகச் செயலாளர் கே.தயானந்தா இணைப்புச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’