தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரதம ஆயுதக் கொள்வனவாளரான குமரன் பத்மநாதன் (கே.பி.) இலங்கை அதிகாரிகளின் தடுப்புக்காவலில் இருப்பதை இன்டர்போலுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்போவதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன கூறியுள்ளார்.
இன்டர்போலினால் தேடப்படும் கிரிமினல்கள் பட்டியலில் கே.பியும் உள்ளதாகவும் எனவே அவருக்கு இலங்கை புகலிடம் அளிக்க முடியாது எனவும் ஜயலத் ஜயவர்தன நேற்று கூறினார். 'ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக இந்தியாவினால் கே.பி. தேடப்படுகிறார். அண்மையில் நான் சென்னை பொலிஸ் ஆணையாளரை சந்தித்து, இலங்கையில் கே.பி. இருப்பதை தெரிவித்தேன். இது தொடர்பான ஆவணங்களையும் நான் கையளித்தேன்' என ஜயலத் ஜயவர்தன எம்.பி. தெரிவித்தார். எனினும் இது தொடர்பாக சென்னையிலிருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’