வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 16 ஜனவரி, 2012

அரசியல் தீர்வு, சம்பூர் மக்கள் மீள்குடியேற்றம், இராணுவ மயமாக்கம் குறித்து கிருஷ்ணா - த.தே.கூ. பேச்சு


னப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக் காண நடவடிக்கையை துரிதபடுத்த இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவது இந்தியாவின் கடமையாகும் என இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் இன்று திங்கட்கிழமை இரவு சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார். இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, பொன்.செல்வராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்குபற்றினர். இதன்போது, வடக்கில் மேற்கொள்ளப்படும் இராணுவ மயமாக்கம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் தெரியப்படுத்தியதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார். அரசங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை தொடர்பிலும் இந்திய அமைச்சர் .கிருஷ்ணாவிடம் எடுத்து கூறியதாக அவர் கூறினார். இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் சம்பூர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அனல் மின் நிலையத்தினால் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் எஸ்.எம்.கிருஷ்ணாவிற்கு தெளிவுபடுத்தியதாக சுமந்திரன் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட விடயங்களை அரச தரப்பினருடன் இடம்பெறவுள்ள சந்திப்பின் போது வலியுறுவதாக எஸ்.எம்.கிருஷ்ணா உறுதியளித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார். இதேவேளை, 13ஆவது திருத்த சட்டத்திற்கு அப்பால் அதிகார பரவலாக்கம் செய்வதாக இந்தியாவிடம் இலங்கை அரசு உறுதியளித்திருந்தது. ஆனால், தற்போது 13ஆவது திருத்த சட்டத்தை கூட முறையாக அமுல்படுத்த தயங்குகின்றனர் என எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் தெரிவித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’