வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 16 ஜனவரி, 2012

அவலத்தின் அரசியல் பிழைப்பு நடத்துபவனல்ல நான் அவலத்திலிருந்து மக்களை மீட்க பாடுபடுபவன் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா


பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக யாழ்ப்பாணம் மண்டைதீவில் கடந்த 21 வருடங்களாக கடற்படையினர் வசமிருந்த சில பகுதிகள் மீள்குடியமர்வதற்காக மீளவும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
மண்டைதீவுப் பகுதிக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி ஆகியோர் மக்களது மீள்குடியேற்றம் தொடர்பில் கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். இந்நிலையில் மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் ஒன்று கூடிய மக்களுடன் கலந்துரையாடி அவர்களது உடனடித் தேவைகள் கோரிக்கைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டனர். கடந்த வருடம் மண்டைதீவுப் பகுதிக்குச் சென்ற அமைச்சர் அவர்களிடம் தமது மீள்குடியேற்றம் தொடர்பில் விரைவான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அம்மக்கள் கோரிக்கையினை முன்வைத்த போது அதற்கு துறைசார்ந்தவர்களுடன் கலந்துரையாடி நிச்சயம் மீள்குடியமர்வுக்கான நடவடிக்கை மேற்கொள்வேன் எனவும் நான் அவலத்தில் அரசியல் பிழைப்பு நடத்துபவனல்ல எனவும் அவலத்திலிருந்து மக்களை மீட்பதே எனது கடமை எனவும் உறுதிபடத் தெரிவித்திருந்தார். இதன் பிரகாரம் அமைச்சர் அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக குறித்த பகுதியிலுள்ள காணிகள் மற்றும் வீடுகள் மக்களிடம் இன்றைய தினம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை 52 குடும்பங்கள் தமது இருப்பிடங்களைப் பெற்றுக்கொண்டு மீள்குடியமர்வுக்காகத் தயாராகி வருகின்றன. இந்நிலையில் அம்மக்களுக்கான அடிப்படை வசதிகளான மலசலகூடம், குடிநீர், மின்சாரம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தான் கவனம் செலுத்தும் அதேவேளை குடிநீர் மலசலகூட வசதிகளைப் பெற்றுத் தருவதற்கு உடனடி நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் அமைச்சர் அவர்கள் இதன்போது சுட்டிக் காட்டியதுடன் இவற்றை விட இங்குள்ள மக்களின் ஏனைய தேவைகள் பிரச்சினைகள் தொடர்பில் தாம் மிகுந்த அக்கறை கொண்டு செயற்படவுள்ளதாகவும் இப்பகுதி மக்களின் வளமான எதிர்காலத்திற்கு தாம் தொடர்ந்தும் பாடுபடத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இதன்போது வேலணை பிரதேச சபைத் தலைவர் சிவராசா (போல்) பிரதேச செயலாளர் நந்தகோபாலன் மற்றும் கடற்படை பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர். மண்டைதீவுப் பகுதியிலிருந்து யுத்த சூழல் காரணமாக 1990 ஆண்டு இடம்பெயர்ந்த மக்கள் 21 ஆண்டுகளின் பின்னர் மீளவும் தமது இருப்பிடங்களுக்கு திரும்புகின்ற நிலையில் மீள்குடியமர்வுக்காக அரும்பாடு பட்டுழைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.












0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’