வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 18 ஜனவரி, 2012

அதிக ஹெலிகொப்டர் பயணங்களை மேற்கொண்டவன் நான்: பிரதமர்


ண்மைக் காலத்தில் அதிக தடவை ஹெலிகொப்டர் மூலமான பயணங்களை மேற்கொண்ட இலங்கை அரசியல்வாதியாக தான் விளங்குவதாக பிரதமர் டி.எம்.ஜயரட்ன நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
தனது உடல்நிலை காரணமாக இவ்வாறான பயணங்களை தனது மருத்துவர்கள் அங்கீகரிக்காத போதிலும் தான் அதிக தடவை ஹெலிகொப்டர் பயணங்களை மேற்கொண்டதாக பிரதமர் ஜயரட்ன கூறினார். ஒரே தினத்தில் நாட்டின் வெ வ்வேறு பாகங்களில் நடைபெறும் கூட்டங்களில் தான் பங்குபற்ற வேண்டியிருந்ததாக அவர் கூறினார். 'ஒரு கூட்டம் வடக்கில் நடக்கும் மற்றொரு கூட்டம் தெற்கில் நடக்கும். நான் கலாசார அலுவல்களுக்குப் பொறுப்பான அமைச்சர்.பல்வேறு சமயத்தளங்களில் நடைபெறும் சந்திப்புகளில் நான் கலந்துகொள்ள வேண்டியிருக்கும். வீதியில் சென்று அனைத்து இடங்களையும் நான் ஒரே தினத்தில் அடைய முடியாது. அதனால் ஹெலிகொப்டர்களை பயன்படுத்துகிறேன். நான் இனியும் இதை தொடர்வேன்' என அவர் கூறினார். விமானப்படை ஹெலிகொப்டர்களை பயன்படுத்துவதற்கு தகைமை பெற்றவர்கள்தொடர்பாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் கூறினார். பல்வேறு நபர்களுக்கு ஹெலிகொப்டர் சவாரிகளை வழங்கியதன் மூலம் விமானப்படை 200 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொண்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்தது. ஜனாதிபதி, பிரதமர், மஹாநாயக்க தேரர்கள், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் ஆகியோரும் விமானப்படை ஹெலிகொப்டர்களை பயன்படுத்துகின்றனர். அத்துடன் பாதுகாப்பு அமைச்சினால் அனுமதிக்கப்படும் எவரும் இவ்வசதிகளை பயன்படுத்த முடியும். எனினும் ஐ.தே.கவிலிருந்து அரசாங்கத் தரப்புக்குத் தாவி அமைச்சுப் பதவியை பெற்ற ஒருவர் குறைந்த முக்கியத்துவமடைய தேவைகளுக்கும் ஹெலிகொப்டர்களை பயன்படுத்துவதாக அகில விராஜ் காரியவசம் எம்.பி. கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’