வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 23 ஜனவரி, 2012

கிரிக்கெட் அணித் தலைவர் பதவியிலிருந்து தில்ஷான் ராஜினாமா


லங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திலகரட்ன தில்ஷான் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த உலகக்கிண்ணத் தொடரின் பின்னர் குமார் சங்கக்கார ராஜினாமா செய்ததையடுத்து திலகரட்ன தில்ஷான் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். எனினும் இலங்கை அணி அண்மைக்காலத்தில் இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்க அணிகளுடன் தோல்விகளைத் தழுவியதையடுத்து இலங்கை கிரிக்கெட் துறை முற்றாக மறுசீரமைக்ப்படவுள்ளதாக செய்திகள்வெளியாகியிருந்தன. அண்மையில் கிரிக்கெட் தேர்வுக்குழுவுக்கு புதிய அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’