இ ராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தமை மற்றும் அரசாங்கத்திற்கு கீழ்படியாதிருக்கச் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பான குற்றப்பத்திரங்கள் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் அவரின் பிரத்தியேக உதவியாளரான சேனக ஹரிப்பிரிய டி சில்வாவுக்கும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்டன.
இவ்விருவரும் மேற்படி குற்றச்சாட்டுகளில் தாம் நிரபராதிகள் எனத் தெரிவித்தனர். இவ்விருவர் மீதான குற்றச்சாட்டுகளை மேல் நீதிமன்ற முதலியார் எஸ்.ஏ.எம். நவ்லி வாசித்தார். அதன்பின் 41 குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் தாம் நிரபராதிகள் என இவ்விருவரும் தெரிவித்தனர். வழக்குத் தொடுநர்கள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி தமித் தொட்டவத்த குற்றப்பத்திரத்தில் சில திருத்தங்களை செய்யக் கோரினார். குற்றம்சுமத்தப்பட்ட சேனக ஹரிப்பிரிய டி சில்வா சார்பில் ஆஜரான உபுல் ஜயசூரிய தான் இத்தகயை திருத்தங்கள் செய்வதற்கு ஆட்சேபம் தெரிவிக்க விரும்புவதாககூறினார். அடுத்த விசாரணை தினத்தில் இத்தகயை ஆட்சேபனையை தெரிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

  












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’