வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 23 ஜனவரி, 2012

வெளிப்படையில்லையேல் மத்தியஸ்தத்தில் பயனில்லை: ஐ.தே.க _


மிழர் விவகாரம் தொடர்பில் அரசில் தீர்வினை முன்வைப்பதற்கு அரசாங்கத்திடம் நேர்மையானதும் வெளிப்படைத்தன்மையானதுமான நோக்கு இல்லையேல் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளில் சர்வதேசமே மத்தியஸ்தம் வகித்தாலும் எதுவும் நடந்துவிடப்போவதில்லை என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கு தமிழர்களின் ஏக பிரதிநிதி கட்சியாகும். எனவே அரசாங்கம் தமிழர் விவகாரம் தொடர்பில் முரண்பாடுகளை களைந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தொடர்ந்தும் பேச்சுக்களை முன்னெடுத்து இலங்கையின் எதிர்காலத்தை நிர்ணயிக்குமாறும் அக்கட்சியின் பிரதிச் செயலாளரும் கம்பஹா மாவட்ட எம்.பியுமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’