வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 13 ஜனவரி, 2012

புலிகள் சார்பு முத்திரை வெளியிடும் கோரிக்கையை கனேடிய தபால்துறை நிராகரித்தது


மிழ் ஈழத்தின் படம் கொண்ட, தமிழீழ விடுதலை புலிகள் சார்பான தனிப்பட்டோரின் முத்திரையை அச்சிடும்படி விடுவிக்கப்பட்ட வேண்டுகோள் மே 2011 இல் கனேடிய தபால் சேவையால் நிராகரிக்கப்பட்டது என கொழும்பு கனேடிய உயர்ஸ்தானிகரலாயம் நேற்று கூறியது. அவ்வாறான ஒரு முத்திரை ஒருபோதும் கனடாவில் சட்டப்பூர்வ பாவனையில் இருக்கவில்லை. ஒரு தடவை நிராகரிக்கப்பட்ட பின் வேறு வேண்டுகோள் விடுவிக்கப்படவில்லை என கனடா தபால் சேவை அதிகாரி ஒருவர் கூறினார்.
கனடாவுக்கான இலங்கை தூதுவர் சித்திராங்கனி வாகிஸ்வர இந்த முத்திரை பற்றி கனேடிய அதிகார நிறுவனங்களுக்கு ஒரு முறைப்பாட்டை செய்தார். இந்த முத்திரை கனடா தபால் நிறுவனத்தால் வெளியிடப்படவில்லை என்பதை நாம் உறுதியாக கூறுகிறோம். இது போலியான முத்திரையாகும். இதையிட்டு எமது பாதுகாப்பு பிரிவு பூரணமாக விசாரித்து வருகின்றது என கனடா தபால் நிறுவனத்தின் பிரதம அதிகாரியான டிபாக் சொப்ரா உயர்ஸ்தானிகர் சித்திராங்கி வாகிஸ்வரவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’